ALL VIDEO NEWS ஆன்மீகம்
அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி.
August 10, 2020 • Dharmalingam

மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தற்பொழுது வரை ஏறக்குறைய மூன்று லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில்தான் உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் உள்ள திமுக எம்எல்ஏ இராமருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 2 எம்எல்ஏக்களுக்கு உறுதிசெய்யப்பட்டது, தற்பொழுது இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளகியுள்ள எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டும் 30 ஆக அதிகரித்துள்ளது.

 இந்நிலையில்  திமுக எம்எல்ஏக்கள் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தின் மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ சரவணன் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழக எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.