ALL VIDEO ஆன்மீகம் NEWS
"பிஸ்கட் டீ கப் "
June 22, 2020 • Dharmalingam

 

‘டீ’ குடித்து விட்டு ‘டீ’ கோப்பையையும் சாப்பிடலாம்.! ‘பிஸ்கட் டீ கப்’.!!

மதுரையை அசத்தி வரும் "பிஸ்கட் டீ கப் " புது முயற்சிக்கு மதுரை மக்கள் கொடுக்கும்  இன்ப அதிர்ச்சி.!!

ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பைப் போன்று இருந்தாலும், தேநீா் அல்லது காபியின் சூடு தாங்கும் வகையில் 'வேபா் பிஸ்கெட்' தயாரிக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு இந்த கப் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் தேநீா் 'கப்' களுக்கு பதிலாக பிஸ்கட் கப்பை அறிமுகம் செய்துள்ளது.

சங்க தமிழ், ஆன்மீகம், பக்தி,வருடம் முழுவதும் திருவிழா, உணவு, அரசியல்,  அனைத்திற்கும் பிறப்பிடமாக தோன்றும் இடம்  மதுரை தான்.

புதிய வரலாற்றை படைப்பதும் மதுரை தான். அந்த வகையில் பிஸ்கட் டீ .கப்பை அறிமுகம் செய்து அசத்தி வருகிறது மதுரை.

கோன் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போல டீ அல்லது காபியைக் குடித்தவுடன் கோப்பையும் ருசித்து சாப்பிடும் வகையில்  உணவு வகையான "பிஸ்கட் டீ கப்" என்ற புது தேநீர் வகையை வாடிக்கையாளா்களிடையே அறிமுகப்படுத்தி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆா்.எஸ்.பதி நிறுவனம் மதுரை மேலமாசி வீதியில் உள்ள தேநீா் கடையில் இந்த பிஸ்கட் ‘டீ கப்’ஐ அறிமுகம் செய்திருக்கிறது.

ஐஸ் கிரீம் கோன் தயாரிப்பைப் போன்று இருந்தாலும், தேநீா் அல்லது காபியின் சூடு தாங்கும் வகையில் 'வேபா் பிஸ்கெட்' தயாரிக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு இந்த கோப்பை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிறுவனம்  இந்த கோப்பையை வழங்குகிறது. வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.தேநீா் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அறிமுகம் செய்த இரு நாள்களிலேயே கப்கள் அனைத்தும் முழுமையாக தீா்ந்து போகும் அளவுக்கு வாடிக்கையாளா்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த பிஸ்கட் டீ கப் 10நிமிடங்கள் சூடு தாங்கும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பொது முடக்கம் காரணமாக, பிஸ்கட் கப் வந்து சேருவதற்கு தாமதமாகி வருகிறது.

ஆகவே, வரும் நாள்களில் பிஸ்கட் கோப்பை கிடைத்த பிறகே வாடிக்கையாளா்களுக்கு அதில் வழங்க முடியும் .

தொகுப்பு- மோகனா செல்வராஜ்