செயின் பறிப்பு கொள்ளையன் சுட்டுக் கொலை

 


    சென்னையில் ஒரே நாளில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை 

அதிகாலை நேரங்களில் சென்னையில் ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வட மாநிலத்தவர்கள் என கண்டறியப்பட்டு இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் ஜாஃபர் என்ற நபர் பதுக்கி வைத்திருந்த நகைகளை மீட்க சென்றபோது காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க முயன்றதாக சொல்லப்படுகின்றது.

இதில் தமிழ்நாடு காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்த கொள்ளையன் கொல்லப்பட்டுள்ளார்