*தென்காசி காசிவிஸ்வநாதர் திருக்கோவிலில் வரும் எப்ரல் 7 ஆம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி திருகுடமுழுக்கு திருப்பணிகள் முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் IPS ஆகியோர் இணைந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
*********************************
அண்டை மாநில முதலமைச்சர்கள் நன்கு பழகுகிறார்களே, ஏன் அவர்களிடம் பேசி தீர்க்க கூடாது - எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்
பேசினால் அனைத்தும் கெட்டு விடும்
பேசி பேசி பார்த்து விட்டோம், அதனால் தான் உச்சநீதிமன்றம் சென்றுள்ளோம்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் நீங்களே தீர்த்துக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறிவிடும்
மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்தனர்
காவிரி ஆணையத்திற்கு, மேகதாது குறித்து பேச உரிமை கிடையாது என்றோம்
- துரைமுருகன்
*************************************
இன்னும் ஒரு மாதத்தில் 7,900 அங்கன்வாடி பணியாளர்கள், 8,997 சத்துணவு சமையலர்கள் நியமிக்கப்படுவார்கள்"
- சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
★**★********★********★★********
மதுரை: நாகமலை கோட்டை பகுதியில் 2 வருடங்களாக இரவு நேரங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட டவுசர் கொள்ளையர்கள் இருவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்