ஆயுள் தண்டனை .சிறுமிக்கு பாலியல் தொல்லை

 


        சங்கரன்கோவில்  அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுப்பிரமணியபுரம் பகுதியை  சேர்ந்த சின்ன முத்தையா(69) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கின் விசாரணையானது திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுரேஷ் குமார் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபாய் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  ரூபாய் 5 லட்சம் வழங்கவும்  தீர்ப்பளித்தார்.

 மேலும் வழக்கை திறம்பட விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்த அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் அனைவரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி. ஆர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார்.