பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்...மேலும் சில செய்திகள்

 


       👉 பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம்.

நாளை (ஜூலை 22) முதல் செப். 11-ம் தேதி வரை நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடைபெறும்.

விவரங்களுக்கு tneaonline.org என்ற தளத்தை பயன்படுத்தலாம்.

❌❌❌❌❌❌❌❌❌❌❌

👉தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை முடிவுகளை வெளியிட்டது.

நீட்: புகார் எழுந்த மையங்களில் அதிக மதிப்பெண்

புகார் எழுந்த மையங்களில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்

ஜார்கண்ட், ஹசாரிபாக் மையத்தில் 22 பேர் 600-க்கு மேல் மதிப்பெண்கள் அரியானா, ரோஹ்தக் மையத்தில் 45 பேர் 600-க்கு மேல் மதிப்பெண்கள் ராஜஸ்தான், சிகர் மையத்தில் 83 பேர் 600க்கு மேல் மதிப்பெண்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய தேர்வு முகமை, மையங்கள் வாரியான நீட் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டது.

❌❌❌❌❌❌❌❌❌❌❌❌

👉சென்னையில் ஆக.31 பார்முலா 4 கார் பந்தயம்.

சென்னையில் ஆகஸ்ட் 31ஆம் தேதியும், நவம்பர் 1 ஆம் தேதியும் பார்முலா 4 கார் பந்தயம்.

ஐபிஎல் பாணியில் கார் பந்தயம் நடத்தத் திட்டம்; இப்போட்டியில் 7 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெறவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் தடைபட்ட நிலையில் மீண்டும் நடத்த ஏற்பாடு.

❌❌❌❌❌❌❌❌❌❌❌

🚺சார் பதிவாளர் காரில் கட்டுக்கட்டாக பணம்.

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் சாய் கீதா லஞ்சம் வாங்குவதாக புகார்- லஞ்ச ஒழிப்பு துறை சோதனை

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை சார்பதிவாளர் சாய் கீதாவின் காரில் இருந்து 500 ரூபாய் கட்டுக்களை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை.

சார் பதிவாளர் காரில் இருந்து ரூ.6,35,000 பறிமுதல்.