தேர்தல் தேதி அறிவிப்பு


        ஏப்ரல் 19 ல் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

2024 மக்களவை தேர்தல் 

47.9 கோடி ஆண் வாக்காளர்கள்

47.1 கோடி பெண் வாக்காளர்கள்

1.8 கோடி முதல் முறை வாக்காளர்கள்

88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள்

19.74 கோடி இளம் வாக்காளர்கள்

82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதை கடந்தவர்கள்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ்.சாந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பு….

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

 மக்களவைத் தேர்தலில் 98.6 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 

நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன.

1.5 கோடி அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்-ராஜீவ் குமார், தலைமை தேர்தல் ஆணையர்

 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பெண் வாக்காளர்கள்

ஏப்ரல் 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்

நாடு முழுவதும் 800 மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய பின்பு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன

85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு

 நாட்டில் எந்த ஒரு பகுதியில் இருந்தாலும் அவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு



மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 தேர்தல் நடைபெறும், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ல் தொடக்கம், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ஆம் தேதி  நடைபெறும் , மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலிருந்து தொடங்குகிறது,வேட்புமனு தாக்கலுக்கான கடைசி தேதி மார்ச் 27, வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை மார்ச் 28 மற்றும் வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் மார்ச் 30 என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, சக்கர நாற்காலி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்

மாலை, இரவு நேர்ங்களில் வங்கிகள் வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல தடை. முன்கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் அனைத்தும் கண்காணிக்கப்படும் -தலைமைத் தேர்தல் ஆணையர்

ஆன்லைன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க ஆன்லைன் பரிவர்த்தனையும் கண்காணிக்கப்படும். தேர்தல் ஆணையர்கள் உள்பட யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், வதந்தி பரப்பக் கூடாது தலைமைத் தேர்தல் ஆணையர்

சமூக வலைதளங்களில் அரசியல் கட்சியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - தலைமைத் தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் 2100 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்