🌹 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: நாராயணபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ்
🍁திருச்சி:லால்குடி அருகே இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் கூலிப்பணிக்காக வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குபின்சிங் (40) மாரடைப்பால் உயிரிழப்பு; கல்லக்குடி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை
🍁சென்னை:குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில் 25 குடிசைகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது.
குடிசை வீடுகளில் தீப்பற்றியதால் ராஜாராம், அஞ்சலி ஆகியோர் வீடுகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மேடவாக்கம், தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
🍁இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
மே 7ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது
🍁சிவகங்கை:திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் மூக்கன் என்பவர் உயிரிழந்தார்.
அரளிப்பாறையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்
🍁பாலியல் வழக்கு, திருமணம் நின்ற நிலையில் போரூர் ஏரியில் குதித்து நிஷாந்த் தற்கொலை;
தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ₹68 லட்சம் மோசடி செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்
🍁புதுக்கோட்டை:சொத்துவரி, தொழில்வரி பாக்கி - வணிக வளாகங்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ரூ.27.40 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
🍁கிருஷ்ணகிரி:ஊத்தங்கரை அருகே ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகள் சிபிஷா (7), பீஷ்மர் (4) ஆகியோருடன் தாய் அம்மு (34) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்
🍁திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்களிடம் அட்டகாசம்: குரங்குகளை கூண்டு வைத்து பிடித்தனர் வனத்துறையினர்
🌺கோவையில்: நகை பட்டறையில் பணிபுரிந்த இளைஞர் 150 கிராம் தங்கத்துடன் தப்பி ஓட்டம்; ₹7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை எடுத்துக்கொண்டு ஓடிய மேற்கு வங்க இளைஞர் பாபனுக்கு போலீஸ் வலை
🍁தூத்துக்குடியில்:உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1,400 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்;
பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனத்தை கலந்து விற்பனைக்கு தயாராக வைத்திருந்தது கண்டுபிடிப்பு
🍁சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மீண்டும் ஒலிபெருக்கி மூலம் வருகை/புறப்பாடு அறிவிப்புகள் செய்யப்படுகிறது
’அமைதியான ரயில் நிலையம்’ என்ற திட்டத்திற்காக, ஒலி அறிவிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது
🍁கன்னியாகுமரியில்: உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 8 மாதங்களுக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
🍁சேலத்தில்:லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட 5 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்களை கைப்பற்றிய போலீசார் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவற்றை தீ வைத்து எரித்தனர்.
🍁தஞ்சாவூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்பிலான, 285 கிலோ கஞ்சாவை, தஞ்சாவூரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்....
🍁சிவகங்கை:அருகே ஒக்கூரில் இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர்
🍁திருப்பத்தூர்:வாணியம்பாடி அருகே ஆம்புலன்ஸ் வர காலதாமதம்: நிறைமாத கர்ப்பிணி சாவு; மலைவாழ் மக்கள் மறியல்: ஆர்டிஓ சமரசம் செய்து வைத்தார்ர
🍁கோவை: பொள்ளாச்சி பகுதியில் தென்னை நார் உற்பத்தி அதிகரிப்பு. விவாசாயிகள் மகிழ்ச்சி
🍁கடலூர்:சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு பகுதியில் சென்னை -கும்பகோணம் நெடுஞ்சாலை உயரத்தை அதிகரிக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை
🍁வழக்கு என்பது வழக்கமானது அல்ல, ஆனால் வழக்கு எப்படி வழக்கமாகிறது என பார்க்கலாம்”
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காததால், தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
🍁ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ரோந்து வாகனம் மிகவும் பழமையானதாக உள்ளது..புதிய வசதி உள்ள வாகனம் இல்லாததால் குற்ற செயல்கள் நடக்கும் இடத்திற்கு வேகமாகவும் துரித்தமாதகவம் செயல் பட வில்லை என்று வருத்தப்படுகின்றனர்..புதிய வாகன ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்திற்கு அமையுமா என எதிர்பார்ப்புடன் காவலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்
செய்தியாளர் பாஸ்கர்
🌏-----உண்மை செய்திகள்-----🌏