💐அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

 

        

    💐அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


போட்டியில் 900 காளைகளும், 340 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.

அமைச்சர்கள் அன்பில் மகேஷ், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்பு.

மாடுபிடி வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த  தங்க மோதிரம்



அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற செல்வராணி என்ற பெண்ணின் காளை... தங்க மோதிரத்தை பரிசாக அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

🌷அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வெள்ளை கொம்பன், கருப்பன் ஆகிய 2 காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்றது

🌷அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி

🌷மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடிகர் சூரியின் புரூஸ்லீ காளை வெற்றி



🌷அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தனது மாட்டை பிடித்தால்  ஒரு லட்ச ரூபாய் தருவதாக அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம் நகரப் பட்டி பூசாரி.  மாடு பிடிபடவில்லை.

🌹🌹அலங்காநல்லூரில் வெற்றி பெற்றோர் விபரம்

 26 காளைகளை அடக்கி அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். 

20 காளைகளை அடக்கி அஜய் என்பவர் 2ஆம் இடமும் 12 காளைகள் அடக்கி ரஞ்சித் 3ஆம் இடமும் பிடித்தார்.

மேலும் சிறந்த மாடுகள் பட்டியலில், முதலிடத்தை புதுக்கோட்டை கைக்குறிச்சி தமிழ்செல்வன் மாடு பிடித்தது. இரண்டாம் இடத்தை புதுக்கோட்டை எம்.எஸ்.சுரேஷ் மாடும் 3ம் இடத்தை உசிலம்பட்டி வெள்ளம்பழம்பட்டி பட்டானி ராஜா மாடும் பிடித்தது.

🙏முதல்முறையாக கார் வென்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு;

26 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்ற அபி சித்தர் நெகிழ்ச்சி


செய்தியாளர் பானு