இருவரி செய்திகள்

 


      💐தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பிரியா.

💘💘💘💘💘💘

    👉குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முக்கு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது

டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவர் ஓய்வில் உள்ளதாக அரசுத்தரப்பு தகவல்

💘💘💘💘💘💘

    🌷🌷சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு சார்பில் 54 ஜோடிகளுக்கு திருமணம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து திருமணத்தை நடத்திவைத்தார்

💘💘💘💘💘💘

    🙏பெரியகுளத்தில் உள்ள ஓ பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில்  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் தலைமையில்  புதிதாக ஓபிஎஸ் நியமிக்கப்பட்ட  200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்  ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

💘💘💘💘💘💘

  


  👉திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி அவர்களுக்கு அரசு வழங்கிய புதிய இன்னோவா வாகனத்தினை தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்களிடம் வழங்கி ஆசியும் வாழ்த்துகளை பெற்றார்.

💘💘💘💘💘💘

    👉ஈரோடு: அந்தியூர் திமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம், மலைக்கிராமங்களுக்குச் செல்லும் அரசுப்பேருந்தில் பயணித்து, மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்


சாலை மோசமாக உள்ளதாக சிலர் கூறியதை அடுத்து, வனத்துறை அனுமதி பெற்று விரைவில் சாலை சீரமைக்கப்படும் என உறுதி அளித்தார்

💘💘💘💘💘💘

    👉வன்முறையை தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதாக டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டது

 டிரம்ப் டிவிட்டர் கணக்கின் தடையை நீக்கினார் எலான் மஸ்க்

💘💘💘💘💘💘

    👉ஒரு ஆட்சியை உருவாக்க கூடியது கூட்டுறவுத்துறை

கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துதரப்பினரும் பயன் பெறுகின்றனர்.

சேலத்தில் 69 ஆவது கூட்டுறவு சங்க வார விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு

💘💘💘💘💘💘

    👉மைசூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கல்வெட்டுகள் மூலம் தமிழர்களின் தொன்மையையும், பல புதிய தகவல்களையும் அறிய முடியும்" - மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

💘💘💘💘💘💘

    👉கருப்பு, சிவப்பு, நீலம் ஒன்றாக இணைந்து காவியை விரட்டுவோம்; அதுதான் இந்த  நாட்டிற்குத் தேவை! அதுதான், நாம் பெரியார், அண்ணா, கலைஞருக்குச் செய்யும் கடமை

- சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆ.ராசா பேச்சு

💘💘💘💘💘💘

    👉பிரியாவுக்கு ஏற்பட்டது போன்ற தவறு இனி நடக்காமல் இருக்க நவ. 23ம் தேதி மருத்துவ நிபுணர்களை அழைத்து ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்ற அறுவை சிகிச்சை தணிக்கை செய்யப்பட இருக்கிறது;

இந்தியாவில் முதல் முறையாக இது செய்யப்பட இருக்கிறது

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

💘💘💘💘💘💘

    👉சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவு


* 60 கி.மீ. தொலைவுக்குள் சுங்கச்சாவடிகள் இருந்தால், தொழில்நுட்ப தீர்வுகளைப் பயன்படுத்தி சிக்கலை தீர்க்கவும் முடிவு

💘💘💘💘💘💘

செய்தியாளர் கார்த்திக்