வட சென்னையில் சர் தியாகராயா மெட்ரோ நிலையம் அருகில் "ராஜீவ் நட்பகம்" சார்பில் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நினைவு தினமும், இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த தினமும் முன்னிட்டு இன்று (31.10.22) திங்கள் காலை 9.00 மணியளவில் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்
மாநில பொதுச் செயலாளர் க.இராமலிங்க ஜோதி தலைமையில் நடைபெற்றது.
முதலாவதாக ராஜீவ் நட்பகத்திற்கென புதிதாக வாங்கப்பட்ட ஒலி பெருக்கியினை முன்னாள் மாமன்ற உறுப்பினர் எம்.கே.பாபு சுந்தரம் அவர்கள் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் வல்லபாய் பட்டேல், இந்திரா காந்தி ஆகியோரின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் 3வது சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஏ.எஸ்.ஷாஜகான், மனித உரிமை துறை முன்னாள் மாவட்ட தலைவர் எஸ்.அப்துல் சமது, வர்த்தக பிரிவின் மாவட்ட தலைவர் வே.உமாபதி, வட்டத் தலைவர் வி.கே.செல்வராஜ், துறைமுகம் பகுதியை சேர்ந்த மண்ணடி மணவாளன், திருவொற்றியூர் நகர காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆர்.எஸ்.கலைமணி, ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த ஆர்.சுரேஷ்குமார், பி.முனியன், டி.ஆனந்தராஜ், எம்.ஏழுமலை, ஏ.காஜாமுகிதின், எம்.ஜெகதீசன், பி.எம்.சேகரன் உள்ளிட்டோர் தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி நிகழ்த்தினார்கள்.
கெனரா வங்கியின் பணியாளர் ஜெயசங்கர் காங்கிரஸ் கொடியினை ஏற்றி வைத்தார். நிகழ்வின் இறுதியில் "பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி" மேற்கொள்ளப் பட்டது. அப்போது, "தீவிரவாதம், பயங்கரவாதம், எந்த ரூபத்தில் வந்தாலும் அன்னை இந்திரா காந்தி வழியில் உயிர் கொடுத்தேனும் தடுத்து நின்று, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காப்போம்" என்று அனைவரும் உறுதிமொழி ஏற்ற போது நெகிழ்வாக இருந்தது. பின்னர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் என்பதால் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
எஸ்.அன்பழகன் நன்றிவுரை கூற நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
செய்தியாளர் பாஸ்கர்