இராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 53வது வார்டில் கடந்த 50 வருட காலமாக மக்களின் தீராத பிரச்சனையாக நீடித்துவந்த போஜராஜன் நகர் கண்ணன் சுரங்கப்பாதை அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு க. ஸ்டாலின் உத்தரவின்படி சுரங்கப்பாதை அமைக்கும் பணி சுமார் ரூ.20 கோடி செலவில் அமைப்பதற்கான அடிகல் நாட்டு விழாவை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன், மாவட்ட பொருப்பாளர் தா.இளைய அருணா, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் இரா.மூர்த்தி, துணை மேயர் மு.மகேஷ்குமார், மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா சுரேஷ், மாமன்ற உறுப்பினர் திருமதி.வேளாங்கன்னி, சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி IAS, மண்டல துணை ஆணையர்.திரு.சிவகுரு பிரபாகரன் IAS, மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் கழக உடன் பிறப்புகள் ஆகியோர் அனைவரும் கலந்துக்கொண்டனர்.
இராயபுரம் மக்களின் நீண்டகால பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த திட்டம் வருவதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் அணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA அவர்களுக்கும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்களுக்கும் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சார்பாகவும், இராயபுரம் தொகுதி மக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.
செய்தியாளர் கார்த்திக்