நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியீடு

 


    🌺நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியீடு


நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் ஜூலை 17ம் தேதி நடைபெறவுள்ளது



🌺    James Webb தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட முதல் படத்தை வெளியிட்டது NASA


விண்வெளியில் இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுதான் மிகத்தெளிவான படம் என நாசா பெருமிதம்

🌴🌴🌴🌴🌴🌴

🌺திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையில் தனியார் கல்லூரி அலுவலக உதவியாளர் சுப்பிரமணி அடித்து கொலை


கல்லூரி பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்டதால் ஆத்திரத்தில் இளைஞர்கள் அவரை அடித்து கொன்றனர்

🌴🌴🌴🌴🌴🌴

🌺அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை வைத்த சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு

வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது

🌴🌴🌴🌴🌴🌴

💉மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் கரூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயிரிழப்பு; மேலும் 4 பேர் படுகாயம்


சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்று திருப்பியபோது இச்சம்பவம் நடந்ததாக தகவல்

🌴🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் பாலாஜி