ஒரு வரிச் செய்திகள்

 


       🙏உளவுத்துறை ஐஜி முதலமைச்சருடன் சந்திப்பு..

உளவுத்துறை ஐ.ஜி-ஆக பொறுப்பேற்றுக்கொண்ட செந்தில்வேலன் ஐ.பி.எஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

🐦🐦🐦🐦🐦🐦

    👉சென்னை: முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ஒரே வாரத்தில் ரூ.12.02 லட்சம் அபராதம் வசூல்

- சென்னை மாநகராட்சி

🐦🐦🐦🐦🐦🐦

    🙏மத்திய அரசின் அறிவுறுத்தல் படி புதுச்சேரியில் ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்;


மலிவு விலையில் அங்கன்வாடியில் தேசியக்கொடி வழங்கப்படும்.

 முதலமைச்சர்  ரங்கசாமி

🐦🐦🐦🐦🐦🐦

    👉டெல்லிக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு டெல்லி அதிமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு வழங்கினர்


அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதன் முதலாக டெல்லி வருகிறார்.

இடம்: தமிழ்நாடு புது இல்லம்.டெல்லி

🐦🐦🐦🐦🐦🐦

    👉சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

சிபிஜ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்றவாளிகளை தப்ப வைக்க போலீசார் மீதும், அறநிலைய துறையினர் மீதும் பொய் வழக்கு பதிந்ததாக குற்றச்சாட்டு

🐦🐦🐦🐦🐦🐦

    👉கேரளாவில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக இயங்கும் பள்ளிகளை ஒழிக்க முடிவு


இருபாலரும் படிக்கும் பள்ளிகளாக மாற்றுவதற்கு 90 நாளில் செயல்திட்டம் உருவாக்குமாறு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவு

🐦🐦🐦🐦🐦🐦

    👉திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

🐦🐦🐦🐦🐦🐦

    😭சென்னை: எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே லாரி மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற புதுக் கல்லூரி மாணவர் முகமது சதக்கத்துல்லா (18) உயிரிழப்பு


விபத்துக்கான காரணம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை

🐦🐦🐦🐦🐦🐦

👉மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு*


நாமக்கல் - பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம்   பகுதியில்  மின்சாரம் தாக்கியதில் விவசாயி பரமசிவம், அவரது மனைவி பழனியம்மாள் உயிரிழப்பு

🐦🐦🐦🐦🐦🐦

    👉அரசு கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம் 


CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு

🐦🐦🐦🐦🐦🐦

    🙏ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும்


75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

🐦🐦🐦🐦🐦🐦

  👉புதிய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ ஆகஸ்ட் 7ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது


மும்பை - அகமதாபாத் இடையே இந்நிறுவனத்தின் முதல் பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது

🐦🐦🐦🐦🐦🐦


செய்தியாளர் பானு