நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே மாணவர்களுக்கு பாட்டுப்பாடி கலகலப்பான அறிவுரை வழங்கிய மாஜி காவல்துறை பெண் எஸ்பி
வீடியோ
ராஜீவ் நட்பகம் சார்பில் ராகுல்காந்தியின் 51,வது பிறந்தநாள் விழா, சென்னை வண்ணாரப்பேட்டை உதவும் கைகள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.கவிஞர் ராமலிங்கஜோதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,
ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பின் அவரது பாதுகாப்புப்பணியில் கண்காணிப்பு அதிகாரியாக அனுசுயா பங்கேற்று குழந்தைகளுக்கு நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்று எம்ஜிஆர் பட பாடலை பாடி கலகலப்பான அறிவுரை வழங்கினார்.முன்னதாக மாணவர்களுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் வியக்கத்தக்க பதில்களை கேட்டு கவிஞர் ராமலிங்கஜோதி
50 புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
இறுதியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உடல்நலம் பெறுவதற்காக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
செய்தியாளர் பாலாஜி