தெற்கு ஆசியாவிலேயே பெரிய தேரோட்டம்... மேலும் சில செய்திகள்

 


       👉தெற்காசியாவின் மூன்றாவது பெரிய தேரான கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது.


தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

🌴🌴🌴🌴🌴

     👉ஓராண்டு திமுக ஆட்சியில் 2666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

🌴🌴🌴🌴🌴

    👉உசிலம்பட்டி அருகே திருமாணிக்கம் கண்மாயின் மடைக் கல்லில் கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு


12 வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டை தனியார் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்

🌴🌴🌴🌴🌴

    👉விசாரணை கைதிகள் மர்ம மரணங்கள் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்


காவலர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே எதிர்காலத்தில் விசாரணை கைதிகளின் மர்ம மரணம் தடுக்கப்படும்

🌴🌴🌴🌴🌴

    👉பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் பிப்லப் குமார் தேவ் திடீர் ராஜினாமா.


உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று சந்தித்த நிலையில், இன்று பிப்லப் ராஜினாமா.

🌴🌴🌴🌴🌴

    👉தமிழ்நாட்டில் இதுவரை நடந்த 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை - கல்வித்துறை தகவல்

🌴🌴🌴🌴🌴

    👉தமிழகத்தில் 6 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படும் - தமிழக அரசு 


கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினி வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு

🌴🌴🌴🌴🌴

    👉பீகாரில் தனது கணவனின் 2வது மனைவியுடன் சண்டை போட்ட ஆத்திரத்தில் கணவன், 2வது மனைவி, மாமியார் என மொத்த குடும்பத்தையே மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி விட்டு முதல் மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🌴🌴🌴🌴🌴

    👉தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் பாதிக்கப்படுவர்


மக்களை பாதிக்காத வகையில் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக சொல்வதை ஏற்க முடியாது 


நெல்லையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேட்டி

🌴🌴🌴🌴🌴


செய்தியாளர் கார்த்திக்