சென்னை கிண்டியில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்... மேலும் சில செய்தி துளிகள்

 

.

       👉சென்னை, கிண்டியில் 1,000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


* கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ₨250 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டடம் அமையவுள்ளது


    👉தாலிக்கு தங்கம் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது; 43 வழக்குகள் பதிவாகியுள்ளன

பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து - முதல்வர் மு.க.ஸ்டாலின்

              

              ❤செய்தித்துளிகள்❤

    👉137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் லிட்டருக்கு 76 காசு - அதிகரித்து 102.16 ரூபாய்க்கும், டீசல் விலை 76 காசு அதிகரித்து 92.19 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967ஆக அதிகரிப்பு


    👉பழனி அருகே ராஜாபுரத்தில் 4 மாத கைக்குழந்தை இறந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. குழந்தையின் சடலம் பழனி அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனைக்காக அனுமதி. தந்தை மகேஷ்வரன் மற்றும் தாயிடம் போலீசார் விசாரணை.



    🙏தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியத்திற்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


    👉ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை; அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன் - விசாரணை ஆணையத்தில் ஓ.பி.எஸ். பதில்



    👉பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அவரது அலுவலகத்தில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி. சந்தித்து, நடந்து முடிந்த நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அடைந்த வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார்.


    👉பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் & பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் சுப்பையாவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. கடந்த 2 ஆண்டுகளாக வழக்கில் முன்னேற்றம் இல்லாத நிலையில் திடீரென சட்ட பிரிவுகளை மாற்றியது ஏன்? என நீதிபதி கேள்வி


    👉தமிழகத்தில் 2,214 கி.மீ. தூரத்திலான நெடுஞ்சாலை பணிகளை மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் - நாடாளுமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திண்டுக்கல் திமுக எம்.பி. வேலுச்சாமி கோரிக்கை


    👉கொடைக்கானல், செண்பகனூர் சாமியார் சோலைக்கு அருகே வருவாய் நிலத்தில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் எரிந்த புதர்த்தீயை வனத்துறை மற்றும் தீ அணைப்புத்துறை இணைந்து கட்டுப்படுத்தினர்..


    👉தஞ்சையில் ரயில் முன் பாய்ந்து இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை: 4 வயது பெண் குழந்தைக்கு தீவிர சிகிக்சை.


    👉ஆளுநர் ரவியுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு

கோடைக்காலம் முடியும் வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பாஜக அலுவலகத்திலும் மோர் பந்தல் அமைக்கப்படும் -  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை


    👉இன்னும் 10 நாட்களுக்குள் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, நகைகள் திரும்ப வழங்கப்படும் 

- கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்


    👉மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? - சுதர்சனம் எம்எல்ஏ 

உடனடியாக செய்யமுடியாது ; உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு


    👉திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி.



    👉முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார். 

 ஹர்பஜன் சிங் மற்றும் டெல்லி எம்.எல்.ஏ. ராகவ் சதா ஆகியோர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.


    👉தமிழக அட்வகேட் ஜெனரல் பதவியிலிருந்து விலகுகிறார் சண்முகசுந்தரம்’ முதல்வரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்க முடிவு..


    👉பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு 


இதனை தவிர்ப்பதற்கு பள்ளி தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


     👉சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து 

மலையில் விழுந்து நொறுங்கி விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை



    சீனாவில் 133 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் நொறுங்கிய நிலையில் அதன் காட்சி 


நிருபர் பாலாஜி