இன்றைய ராசிபலன்

 


    இன்றைய (16-02-2022) ராசி பலன்கள்


மேஷம்

பிப்ரவரி 16, 2022


அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். வாகனப் பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : இழுபறிகள் அகலும். 


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும். 


கிருத்திகை : லாபம் மேம்படும். 

---------------------------------------


ரிஷபம்

பிப்ரவரி 16, 2022


வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


கிருத்திகை : புதுமையான நாள். 


ரோகிணி : புரிதல் உண்டாகும்.


மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------


மிதுனம்

பிப்ரவரி 16, 2022


புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை


மிருகசீரிஷம் : முயற்சிகள் கைகூடும். 


திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.


புனர்பூசம் : சந்தோஷமான நாள்.

---------------------------------------


கடகம்

பிப்ரவரி 16, 2022


சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.  நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.  புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். தைரியம் மேம்படும் நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்


புனர்பூசம் : மேன்மை உண்டாகும். 


பூசம் : மாற்றமான நாள். 


ஆயில்யம் : தீர்வு கிடைக்கும். 

---------------------------------------


சிம்மம்

பிப்ரவரி 16, 2022


கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

மகம் : ஆதரவு கிடைக்கும்.


பூரம் : நன்மையான நாள். 


உத்திரம் : வரவு மேம்படும்.

---------------------------------------


கன்னி

பிப்ரவரி 16, 2022


வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். சிக்கல் குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 


அஸ்தம் : முன்னேற்றமான நாள். 


சித்திரை : மகிழ்ச்சி உண்டாகும்.

--------------------------------------


துலாம்

பிப்ரவரி 16, 2022


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நிர்வாகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு சார்ந்த துறைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதளவில் எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்


சித்திரை : திறமைகள் வெளிப்படும். 


சுவாதி : லாபம் மேம்படும்.


விசாகம் : மாற்றமான நாள். 

---------------------------------------


விருச்சிகம்

பிப்ரவரி 16, 2022


எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் நல்லது. செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


விசாகம் : முன்னேற்றமான நாள். 


அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.


கேட்டை : அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------


தனுசு

பிப்ரவரி 16, 2022


சொத்து வாங்குவது மற்றும் விற்பதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையை கையாள வேண்டும். விரயங்களில் கவனம் வேண்டிய நாள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மூலம் :  கவனம் வேண்டும்.


பூராடம் : அலைச்சல்கள் மேம்படும்.


உத்திராடம் : சேமிப்புகள் குறையும். 

---------------------------------------


மகரம்

பிப்ரவரி 16, 2022


தாய்மாமனின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். வேலையில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கவலை குறையும் நாள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.


திருவோணம் : ஆதாயம் கிடைக்கும். 


அவிட்டம் : மரியாதை அதிகரிக்கும்.

---------------------------------------


கும்பம்

பிப்ரவரி 16, 2022


தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : உதவி கிடைக்கும். 


சதயம் : ஆர்வம் அதிகரிக்கும். 


பூரட்டாதி : ஆதாயகரமான நாள். 

---------------------------------------


மீனம்

பிப்ரவரி 16, 2022


தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் இலக்குகள் உண்டாகும். இன்பமான நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்


பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும். 


உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும். 


ரேவதி : இலக்குகள் பிறக்கும்.


                        *சுபம்* 


திருமதி மோகனா செல்வராஜ்


--------------------------------------