வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.வீடியோ

 


வீடியோ


வடபழநி முருகன் கோவில் குடமுழுக்கு விழா.


சென்னை வடபழனியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில், கடந்த 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பின்னர், கோவில் கோபுரம் , 2 கோடியே 56 லட்சம் ரூபாய் செலவில் தற்போது கோவில் புதுப்பிக்கப்பட்டது. தங்கமுலாம் பூசப்பட்ட 7 தங்க கலசங்கள், ராஜகோபுரத்தில் மேல் பொருத்தப்பட்டன. யாக சாலை பூஜைகளைத் தொடர்ந்து இன்று (23-01-22)குடமுழுக்‍கு விழா நடைபெற்றது. கோபுர கலசங்களுக்‍கு பூஜைகள் நடத்தப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்‍கு நடைபெற்றது.


குடமுழுக்‍கு நடைபெற்றபோது, மும்மூர்த்திகள் போல் கருடன்கள் வானில் வட்டமடித்த காட்சியை காணமுடிந்தது.


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்‍கையாக பக்‍தர்கள் யாரும் குடமுழுக்‍கு விழாவிற்கு அனுமதிக்‍கப்படவில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோவில் நிர்வாகிகள் பங்கேற்றனர். 48 நாட்கள் பூஜைகள் நடைபெறும என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு.


திருமதி மோகனா செல்வராஜ்