👉வரும் 8, 9ம் தேதிகளில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஊரடங்கு நாளன்று போட்டி தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது
எழுத்து தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
👀👀❤👀👀❤👀👀
👉கல்லூரி விடுதிகளும் மூடல்
உயர்கல்வித்துறை உத்தரவு
கல்லூரிகளுக்கு வரும் 20-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அது சார்ந்த விடுதிகளையும் உடனடியாக மூட உத்தரவு
அனைத்து வகை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு
👀👀❤👀👀❤👀👀
👉குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி;
பஞ்சாப் பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் விளக்கினார் பிரதமர்.
👀👀❤👀👀❤👀👀
👉 தஞ்சையில் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்துள்ளார்; 2021 -22ம் ஆண்டுக்காக தற்போது 3,219 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. - அமைச்சர் சக்கரபாணி
👀👀❤👀👀❤👀👀
👉ஒட்டன்சத்திரம் 3வது வார்டு தென்றல் நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ 3 இலட்சம் பணம் 20பவுன் நகை கொள்ளை ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை.
👀👀❤👀👀❤👀👀
👉புல்லி பாய்' செயலியை உருவாக்கிய இளைஞர் அசாமில் கைது
21 வயதான நீரஜ் பிஷ்னோயை கைது செய்தது டெல்லி காவல்துறை
செயலி மூலம் முஸ்லீம் பெண்களை ஏலமிட்ட விவகாரத்தில் நடவடிக்கை
👀👀❤👀👀❤👀👀
👉மேல்மருவத்தூர் கோயில் தைப்பூச விழாவையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு
👀👀❤👀👀❤👀👀
👉நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி சேர்க்கை இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதி - முதலமைச்சர்
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு இன்னும் அனுப்பப்படவில்லை - முதல்வர்
👀👀❤👀👀❤👀👀
👉பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
👀👀❤👀👀❤👀👀
👉அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? - பேரவையில் துரைமுருகன் ஆவேசம்
* திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்களை அதிமுக அரசு மூடியது
* நாங்கள் ஒரு திட்டத்தை மூடினால் என்ன தவறு? - அமைச்சர் துரைமுருகன்
👀👀❤👀👀❤👀👀
👉மதுரையில் வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைப்பு - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
👀👀❤👀👀❤👀👀
👉ஒமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் படுக்கை வசதிகளை செய்து தர பேரவையில் ஈபிஎஸ் கோரிக்கை
* மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்கட்சித் தலைவர் பேச வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
👀👀❤👀👀❤👀👀
👉தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீதான வழக்கு ரத்து
கடந்த 2016ல் நெல்லையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை
வழக்கை ரத்து செய்யக்கோரி கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில் ஆணை
மனுதாரர் வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் கருத்து தெரிவிக்கவில்லை எனக் கூறி வழக்கு ரத்து
👀👀❤👀👀❤👀👀
👉செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு காவல் நிலையம் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
கார்த்திக் மற்றும் மகேஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்
👀👀❤👀👀❤👀👀
👉சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் 80 மாணவர்களுக்கு கொரோனா உறுதி: ஆய்வுக்கு பின் அமைச்சர்கள் பொன்முடி, மா. சுப்பிரமணியன் பேட்டி
👀👀❤👀👀❤👀👀
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
சென்னை மாநகரில் 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்
499 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்படும் என மாநகர காவல்துறை தகவல்
👀👀❤👀👀❤👀👀
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைப்பு
* வரும் 20-ம் வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
* பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு ராஜேந்திர பாலாஜி மாற்றம்
👀👀❤👀👀❤👀👀
நிருபர் பாஸ்கர்
🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏