முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் காலமானார்

 


   😢முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்


50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.


அவருக்கும்  கருணாநிதிக்கும்  இடையேயான உறவு அவ்வளவு எளிதில்  யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது


கலைஞர் கருணாநிதியை பற்றி  தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார்

                        💧💧💧💧💧

     🙏தமிழகத்தில் காமராஜருக்கு பிறகு நல்ல முதலமைச்சர் அமையவில்லை


மாநாடு வெற்றி விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சு

                        💧💧💧💧💧

     👉கோயில் பயிற்சிப் பள்ளியில் பயில்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 ஊக்கத்தொகை, இந்த மாதம் முதல் ₹3,000ஆக உயர்த்தி வழங்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு

                        💧💧💧💧💧

     💢💥நாடு முழுவதும் உள்ள செல்போன் உதிரிபாக நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறை திடீர் சோதனை நடைபெற்றது.

                        💧💧💧💧💧

     ✌கிறிஸ்துமஸ் பண்டிகை: வருகிற 24 முதல் ஜனவரி 2 வரை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு விடுமுறை

                        💧💧💧💧💧

      😢ஈரோடு அரசு மருத்துவமனையில் பிறந்து 2 தினங்களே ஆன குழந்தை உயிரிழப்பு


மருத்துவமனை மீது உறவினர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு குழந்தையை சரியாக பராமரிக்கவில்லை என பெற்றோர் குற்றச்சாட்டு

                        💧💧💧💧💧


     👧பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் ’குழந்தை திருமண தடுப்பு மசோதா 2021’ மக்களவையில் தாக்கல்


பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி மசோதாவை தாக்கல் செய்தார்

                       💧💧💧💧💧

     👮செங்கல்பட்டு மாவட்டத்தில் குட்கா, கஞ்சா விற்பனை குறித்து  7200102104 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் - எஸ்.பி.

                        💧💧💧💧💧

     💢💥பிப்ரவரி 12, 13ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்?


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டம் என தகவல்


தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3வது வாரத்தில் வெளியிட முடிவு எனவும் தகவல்


சட்டப்பேரவை நிறைவு மற்றும் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கிய பின் தேர்தலை நடத்த திட்டம்


21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெற வாய்ப்பு


                        💧💧💧💧💧


நிருபர் கார்த்திக்