விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலை மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன், ஏடிஎஸ்பி லாவண்யா மற்றும் காவல்துறையினர் தோளில் தூக்கிச் சென்று இறுதி சடங்கு செய்தனர்.
💧💧💧💧💧
👮சைப்ரஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணிடம் பேஸ்புக் மூலம் பழகி, திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி ₹10 லட்சம் பெற்று மோசடி செய்த சென்னையை சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் கைது..
*சென்னை காவல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலமாக பெண் அனுப்பிய புகாரில் போலீஸ் நடவடிக்கை.
💧💧💧💧💧
👮கோவை வெள்ளளூரில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளித்த அரசு பள்ளி கணிணி ஆசிரியர் விஜய் ஆனந்தை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
💧💧💧💧💧
👊👉வாட்ஸ் அப் குரூப் உறுப்பினர்களின் சட்டவிரோத கருத்து பதிவுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
💧💧💧💧💧
👉✌மதுரை மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 15 கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான காலிப்பணியிடங்களுக்காக கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் அறிவிப்பு.
💧💧💧💧💧
🙏711 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரண விஷயம் அல்ல: ஹர்பஜன் சிங்கிற்கு கோலி, டிராவிட் பாராட்டு.
💧💧💧💧💧
👉இலங்கையில் விடுமுறை கேட்டு மறுக்கப்பட்டதால் சக காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் உயிரிழப்பு.
💧💧💧💧💧
👉👌உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியது நாசா
💧💧💧💧💧
💥💢கரூர் நாகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகித்த விவகாரம்
பள்ளி தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் - கரூர் ஆட்சியர் பிரபு சங்கர்
சென்னை மெரினா கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பார்த்து மகிழ தற்காலிக நடைபாதையை திங்கள் கிழமை சென்னை மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைக்கிறார்
💧💧💧💧💧
👉💥திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் மற்றும் இதர சேவைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு
(25.12.2021) சென்னையிலிருந்து மதுரைக்கு புறப்பட்ட தேஜாஸ் விரைவு ரயிலில் தனியார் நிறுவன உணவு வழங்கும் ஊழியர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து சேவை செய்து பயணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
💧💧💧💧💧
🙏 சகிப்புத்தன்மையையும், அகிம்சையையும், உயர்ந்த அன்பையும் போதித்த மனிதநேய மாணிக்கம் இயேசு பிரான் பிறந்தநாளை உலகெங்கும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகின்றனர்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
💧💧💧💧💧
🙏 புனிதமான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
- குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த
💧💧💧💧💧
நிருபர் கார்த்திக்
🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏