நடிகர் ரஜினிகாந்துக்கு ஹர்பஜன் சிங் பிறந்தநாள் வாழ்த்து
இன்று தனது 72 வது அகவையில் அடியெடுத்து வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு திரையுல நண்பர்கள் , ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரரும் , நடிகருமான ஹர்பஜன் சிங் தனது தனித்துவமான வாழ்த்தால் அதிக கவனம் பெற்றுள்ளார். ரஜினிகாந்திற்கு ஒவ்வொரு ஆண்டும் தனது ட்விட்டட் பக்கத்தில் தமிழில் எழுதி வாழ்த்து தெரிவிப்பார் ஹர்பஜன் சிங். ஹர்பஜனுக்கு தமிழ் மீதான ஆர்வம் நாம் எல்லோரும் அறிந்தது தான்.
"என் மாருமேல சூப்பர் ஸ்டார்"
80's பில்லாவும் நீங்கள் தான்
90's பாட்ஷாவும் நீங்கள் தான்
2k அண்ணாத்த நீங்கள் தான். சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் #HBDSuperstarRajinikanth #SuperstarRajinikanth #ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு ஹர்பஜன் சிங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
🙏தலைவர்கள் நடிகர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்
🙏ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து
🙏72ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால்மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்”என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
🙏இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்துக்கு எனது வாழ்த்துகள்; அவர் நல்ல ஆரோக்கியத்துடன் சீரும் சிறப்புமாக வாழ நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
🙏மலையாள நடிகர் மம்முட்டி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் ரஜினிக்கு வாழ்த்து
🙏 இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நல்ல ஆரோக்யத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து ரசிகர்களை மகிழ்விக்க மனதார வாழ்த்துகிறேன்.
கமல் ட்விட்..
நிருபர் பாலாஜி
🙏தடுப்பூசி முகக் கவசம் கட்டாயம்🙏