ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மூலமாக சில்லறை விற்பனை நிலையத்தை சட்டமன்ற உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
அம்பத்தூா் தொழிற்பேட்டையில் ஆவின் பால்பண்ணை வளாகத்தில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் மூலமாக சில்லறை விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் நிலையத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் இந்த பெட்ரோல் நிலையத்தை இயக்கி பராமரித்திடும் பொறுப்பு ஆவின் நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை நிலையத்தில், சென்னை ஆவின் நிர்வாக வாகனங்கள், பெருநகர பால் பண்ணைகளில் இயங்கி வரும் பால் பாக்கெட் ஒப்பந்த வாகனங்கள் மற்றும் பொது மக்களின் வாகனங்கள் என தினந்தோறும் 4 ஆயிரம் லிட்டா் பெட்ரோலும், 6 ஆயிரம் லிட்டா் டீசலும் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என ஆவின் நிறுவனம் அறிவிப்பு.
நிருபர் கார்த்திக்
🙏தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏