சென்னை சேப்பாக்கத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
***********
உலகச் செய்திகள்
அமெரிக்கா முயற்சி:
ஹைப்பர் சோனிக் வகை ஏவுகணையை சீனா சோதனை செய்ததை தொடர்ந்து அதிநவீன திறன் படைத்த லேசர் ஆயுதங்களை உருவாக்க அமெரிக்கா முயன்று வருகிறது.
***********
மாநிலச் செய்திகள்
இன்று காலை லேசான நிலநடுக்கம்:
மணிப்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 4.4-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காலை 7.48 மணிக்கு உணரப்பட்டது.
***********
இன்று நான்காவது நாளாக காற்று மாசு:
டெல்லியில் தீபாவளியைத் தொடர்ந்து இன்று நான்காவது நாளாக காற்று மாசு நீடிக்கிறது. அதிகாலை பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக விமான நிலையத்தில் காட்சிகள் மறைந்தன.
***********
பிரேக் தரிசனம் ரத்து:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 13, 14 மற்றும் 15ஆம் தேதிகளில் 3 நாட்களுக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
***********
காணொளி காட்சி மூலம்:
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காணொளி காட்சி மூலம் வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு முடிவு செய்துள்ளது.
***********
இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு:
தற்சார்பு திட்டத்தின் கீழ் விண்வெளித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
***********
14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
***********
தமிழநாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மாநில அரசு கேட்டுக்கொண்டால் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட 5 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!
************
மாவட்டச் செய்திகள்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை:
கனமழை காரணமாக சென்னை, திருவள்;ர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், நாகை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
***********
தமிழக முதல்வர் உத்தரவு:
சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
***************
வெளியூர் சென்றவர்கள் யாரும் சென்னைக்கு திரும்ப வேண்டாம் என முதல்வர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
மக்களைக் காப்பாற்ற வேண்டிய அரசு இதுபோன்று வரவேண்டாம் என கூறி கைவிரித்து விட்டால் என்ன செய்வது?
-வி.கே.சசிகலா
🎾🏏🎾🏏
விளையாட்டுச் செய்திகள்:
பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி:
🎾🎾🎾🎾🥍🥍🥍🥍
பிரான்சில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த டேனில் மெட்விடேவை தோற்கடித்து 6வது முறையாக ஜோகோவிச் பட்டம் வென்றார்.
🏏🏏🏏
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
திருமதி மோகனா
🏏🏏🏏🏏🏏