ஆலய வழிபாட்டு முறைகள் பற்றிய பதிவுகள் :*
பகுதி 1
1. ஆலயத்திற்கு செல்லும் போது அங்குள்ள குளத்தில் அல்லது நீர்நிலைகளில் குளித்துவிட்டு அல்லது கை, கால்கள் கழுவிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
2. வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.
3. எக்காரணத்தைக் கொண்டும் காலைக்கடன்களை முடிக்காமலும், குளிக்காமலும் கோயிலுக்குள் செல்லக் கூடாது. இது சுய ஒழுக்கம் மட்டுமின்றி ஆலய புனிதத்தையும் பாதிக்கும்.
4. ஆலயத்திற்குள் சென்றதும் முதலில் கோபுரத்தைமும், பின் கொடிமரத்தையும் வணங்க வேண்டும்.
5. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.
6. கோயில் கோபுரத்தை ஆண்கள் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் வழிபட வேண்டும். பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் வழிபட வேண்டும்.
7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு போன்றவை அணிந்து கொண்டு ஆலயத்திற்குள் செல்லக்கூடாது. மேலும் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.
8. ஆண்கள் வேஷ்டி, சட்டையும் மற்றும் பெண்கள் புடவை கட்டிக்கொண்டு மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல முயற்சி செய்யுங்கள்.
9. ஆலயத்தின் மூலவரை தரிசிக்கும் போது ஆண்கள் கண்டிப்பாக மேலாடை அணியக்கூடாது.
10. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.
11. எந்த ஆலயத்திற்கு சென்றாலும் அங்கு பூஜிக்கப்படும் சிலைகள் தொட்டு வணங்கக் கூடாது.
12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.
13. சிவன் கோயில் என்றால் முதலில் விநாயகர், பரிவார மூர்த்திகள் மற்றும் நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
14. விநாயகரை இரு கைகளால், தலையில் கொட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
15. கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ள ஆலயங்களில் கண்டிப்பாக தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
இது போன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது உண்மை செய்திகள் ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
*🤘ஓம் நமசிவாய🙏*
மோகனா செல்வராஜ்