இரு வரி செய்திகள்

 


    சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 25 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். இதுவரை 25,40,394 பேர் பயனடைந்துள்ளதாக



மக்கள் நல்வாழ்த்துத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.


*****

உலகச் செய்திகள்



இந்தியா குறித்து பொய்யான பரப்புரையை மேற்கொள்ளும் தளமாக ஐ.நா. சபையை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.


******


தைவான் விவகாரத்தில் தாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


******


மாநிலச் செய்திகள்



பதற்றம், கலவரத்தை தடுக்க புதுச்சேரி மாநிலம் திருநள்ளாறு பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா அறிவித்துள்ளார். 


******


தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


******


தமிழகத்தில் பொதுமுடக்கத்தை மேலும் தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.


*****


தமிழகத்தில் இன்று 6வது கட்டமாக 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


*****


எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் இருப்பு குறித்து அடுத்த வார இறுதிக்குள் மாநில அரசுகள் அறிவிக்கும் என்று நம்புவதாகவும், அதனால் சமையல் எண்ணெய் மீதான விலை கூடுதலாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


*****


டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் அபியாஸ் எனப்படும் அதிவேகமாக செல்லக்கூடிய சிறிய ரக விமானம் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.


****


வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பாக நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வருவாய் மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.



மாவட்டச் செய்திகள்



சென்னையில் வரும் 27ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணைய குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.


🏏🏏🏏🏏


விளையாட்டுச் செய்திகள்



டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தொடங்கும் சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.


👌👌👌👌


இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


திருமதி மோகனா 


😷முக கவசம் உயிர் கவசம்😷