பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுக - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிலைகளை 3 மாதங்களில் அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு
இடை நீக்கம் - சட்டப்பிரிவு செல்லும்
முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவு செல்லும் - சென்னை உயர்நீதிமன்றம்
*சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது
- சென்னை உயர்நீதிமன்றம்
💢லக்கிம்பூர் சம்பவத்தில்
யார் யாரெல்லாம் குற்றவாளிகள் யார் யார் மீதெல்லாம் நீங்கள் வழக்கு பதிவு செய்திருக்கிறீர்கள் என்ற அத்தனை விவரங்களும் ஒன்றுவிடாமல் வழங்கப்பட வேண்டும் : உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
திண்டுக்கல் சீலப்பாடி SBI ATM-ல் அனாதையாக கிடந்த ரூ.6000- யை மதுவிலக்கு சார்பு ஆய்வாளர் அபுதல்ஹா, காவலர் முனியப்பன் ஆகியோர் எடுத்து மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
மேலும் பணத்தை தவறவிட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் தொடர்பு கொண்டால் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
துபாயிலிருந்து வந்த பயணி ஒருவரின் லேப்டாப் சார்ஜருக்குள் வைத்து கடத்தி வரப்பட்ட 285 கிராம் தங்க நகைகளை சென்னை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்
பழனி அடிவாரம் பாத விநாயகர் கோவில் முன் வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய தினங்களில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் H.ராஜா , மாநில சிறுபான்மை தலைவர் வேலூர் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பழநியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. .
மதுரை மீனாட்சியம்மன் கோவில் முன்பு முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் போராட்டம்.