இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், எங்கள் மனதை விட்டு மறையாத கல்வி கடவுளுக்கு நினைவஞ்சலி 🙏
இன்று காந்தி பிறந்தநாள் மட்டுமல்ல.. பெருந்தலைவர் கமராசரின் நினைவு நாளும் கூட...
ஒருமுறை முதல்-அமைச்சர் காமராசர் ரெயிலில் பகல் வேளையில் திருநெல்வேலிக்குப் பயணமானார்.
விருதுநகர் ரெயில் நிலையத்தில் வண்டி நின்றபோது நிறைய பிரமுகர்கள் காமராசரை சந்தித்தனர். காமராசரோ வண்டியில் இருந்து இறங்கவே இல்லை.
ரயில் பெட்டியின் வாசலில் நின்று அவர்களின் வரவேற்பைப் பெற்றுக் கொண்டார்.
வண்டி நகரும் முன் ஒரு தொண்டர் காமராசரிடம்
'அய்யா அதோ அம்மா நிக்காங்க'
-என்று காட்ட காமராசர் ஏறிட்டுப் பார்த்தார்.
கூட்டத்துக்கு அப்பால் அவரது தாயார் நின்று கொண்டு மகனைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்.
வண்டி நகரத் தொடங்கியது காமராசர் ரெயில் பெட்டியின் வாசலில் நின்று கொண்டிருந்தார். பெட்டியின் வாசல் அவரது தாயாருக்கு நேர் எதிரே வந்த போது,
“சௌக்கியமா அம்மா'’ என்று காமராசர் கேட்டார்.
தாயாரின் முகம் மேலும் மலர்ந்தது. வண்டி மேலும் நகர்ந்தது.
தனது தாயார் தன்னைக் காணவேண்டும் என்பதற்காக தனது முழு உருவமும் வெளியே தெரியும்படி காமராசர் ரெயில் பெட்டி வாசலில் நின்று கொண்டே இருந்தார் காமராஜர் .
தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க ரெயில் தெற்கு நோக்கி வேகம் எடுத்தது...
இவர் போல் தலைவர் உண்டோ இவ்வுலகில் அவர் மறையவில்லை நம்முடனே வாழ்கிறார்...
😷முக கவசம் உயிர் கவசம்😷