👉 நீண்ட பைக் பயணம் - தார் பாலைவனப் பகுதியில் ஓய்வெடுக்கும் அஜித்குமார்
👉எனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கல, விருது
கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி. கே.பி சார் உடன் இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
டெல்லி செல்லும் முன் போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் பேட்டி.
👉தமிழ்நாடு முழுவதும் நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 23,27,907 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; இதில் 8.59 லட்சம் பேர் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளனர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
👉சென்னையை அடுத்த வடக்கு மலையம்பாக்கத்தில் பஞ்சரான மினி லாரியின் டயரை மாற்றிக்கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம் (47), அவ்வழியாக வந்த தனியார் பேருந்து மோதியதில் உயிரிழப்பு
கவனக்குறைவாக பேருந்து ஓட்டிய டிரைவர் பிலவேந்திரன் (40) கைது
👉கொடைக்கானல் அடுக்கம் நெடுஞ்காலை நேற்று இரவு பெய்த கன மழைக்கு 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு.
5 க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பெயர்ந்து, அடுக்கம் கிராம மக்கள் கொடைக்கானல் பகுதிக்கும், பெரியகுளம் நகருக்கும் செல்லமுடியாமல் சிக்கி தவிப்பு.
👉நாளை நடைபெற இருந்த அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்
செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்தது
👉⛽தொடர்ந்து ஏறு முகத்தில் பெட்ரோல் டீசல் விலை!..*
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 104.52ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து ரூ 100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ச்சியான டீசல் பெட்ரோல் விலையேற்றத்தா ல் அத்தியாவசியா பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி!
👉ஈரானில் பதவியேற்பு விழாவில் ஆளுநரை மேடையில் ஏறி பளார் என்று அறைந்த நபர்
👉உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்.
நிருபர் மணிகண்டன்