நடிகர் திலகம்' சிவாஜி கணேசனின் 93-வது பிறந்ததினம் இன்று! 🙏
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அடையாறு மேம்பாலம் அருகே உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் சிவாஜி குடும்பத்தினர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
நடிப்பின் உச்சம் - நட்பின் இலக்கணம் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்தநாள்!
அனல்பறக்கும் புரட்சிகர பராசக்தி வசனத்தை சிம்மக்குரலில் கர்ஜித்து தலைவர் கலைஞருடன் நட்புப் பாராட்டிய குணசேகரன் அவர்! முதல்வர் மு க ஸ்டாலின் புகழஞ்சலி
கலையுலகம் உள்ளவரை அவரது புகழ் போற்றப்படும்!
அப்பா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடிய முதல்வருக்கு நன்றி- நடிகர் பிரபு
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரவம்!
நிருபர் பார்த்திபன்