பழநி மலைக்கோயில் ரோப்காரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

 


            பழநி மலைக்கோயில் ரோப்காரில் பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. 


 பழநி மலைக்கோயில் தற்போது வருடாந்திர பராமரிப்பு பணி நடந்து வருகிறது. ரோப்காரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான ஷாப்ட் இயந்திரம் பொருத்திய பின், ரூ.7 லட்சம் மதிப்பில் இரும்புக்கயிறு மாற்றப்பட்டுள்ளது.