பொதுத்துறை நிறுவனச் சொத்துக்களை ஒன்றிய அரசு விற்கக் கூடாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்களை விற்பது தேச நலனுக்கு எதிரானது. மேலும், பொதுச்சொத்துக்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
👉 சென்னை: 1987 இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 சமூக நீதிப்போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தார்.