குற்றால அருவியில் குளிக்க அனுமதி*
குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி..
👮திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலையூரில் சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை*
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி மலையூர்- பள்ளத்துக்காடு பகுதியில் சொத்துத் தகராறில் வெள்ளை (65) என்ற விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை.இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து நத்தம் போலீசார் விசாரணை.
💢சர்வதேச விமான சேவைகளை ஸ்ரீநகரிலிருந்து தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன:
- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
👉லெட்டர் பேட் சட்டக்கல்லூரிகளில் பட்டங்கள் வாங்கப்படுகின்றன -ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன்
👉தேர்தல் நேர்மையாக நடைபெறுவதற்கான அறிகுறிகள் இல்லை: கமல்
💢💥கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 காரின் ஓட்டுநர்கள் வின்சென்ட் கோபி, சுமந்த் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
👮கோவை: கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இகனையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் விமானப்படை லெப்டினன்ட் அமிர்தேஷ் என்பவரை போலீசார் கைது செய்து ஒருநாள் மட்டும் ரிமாண்ட் செய்ய கோவை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
🙏காதிலே விஷம் ஊற்றி கொல்லப்பட்ட சாதி ஆணவப்படுகொலையில் 18ஆண்டுகளுகுப் பிறகு நீதிகிடைத்தது..
ஆனாலும் உயிர் கிடைக்கவில்லை.
தமிழ்நாடு அரசு சாதி ஆணவப் படுகொலைக்கெதிராக ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும்.
பாலபாரதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
👮💥போபால் எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குனர் கைது:
சிபிஐ அதிரடி நடவடிக்கை
மருத்துவமனைக்கு தேவையான மருந்துகளை வாங்குவதற்கு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரை லஞ்சம் பெற்றதற்காக கைது
💢💥சென்னை கோட்டை இரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு; ரயில்வே போலீசார் விசாரணை
👤👉ஆன்லைன் விளையாட்டுக்கள் தடை செய்யப்படும் - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
👮💢 ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் பறிமுதல்; போலீஸ் விசாரணை
👮👉செக்காணூரணி அருகே டாஸ்மார்க் கடையில் கத்தியை காட்டி 51,700 பணம் கொள்ளை.
💢💥வெங்கடேச பண்ணையாரின் 18 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் உள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்
👮மீஞ்சூரில் 700 கிலோ குட்கா பறிமுதல்.
நிருபர் கார்த்திக்
😷முகக் கவசம் உயிர் கவசம்😷