நீட் தேர்வு செய்திகள்

 


     நீட் தேர்வு தொடங்கியது


தமிழ்நாட்டில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது; 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது   


         நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது. கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு நடக்கும் தேர்வை 3,862 மையங்களில் 16.14 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ், மலையாளம், பஞ்சாபி மொழிகள் முதன்முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடக்கிறது.


நெல்லை: மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது, குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து விளக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


 சேலத்தில் நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் பெற்றோருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலமாக ஆறுதல்


 சேலத்தில் நீட்தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி; பெற்றோருக்கு ஆறுதல்


 உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்.