முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மனைவிக்கு தலைவர்கள் அஞ்சலி

 


      உடல்நல குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக உடல்நல குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த     அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி(62) இன்று காலை 6.45 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.


ஓபிஎஸ் அவர்களின் மனைவி விஜயலட்சுமி உயிரிழந்ததை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 


ஓபிஎஸ் மனைவி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்



ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி!l



முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி உடல் தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அவரது சொந்த ஊரான பெரியகுளத்தில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதால் உடல் கொண்டு செல்லப்பட்டது.




இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைக்கு சசிகலா நேரில் வருகை தந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு சசிகலா நேரில் ஆறுதல் தெரிவித்தார்.




 கண்கலங்கிய ஓ.பன்னீர் செல்வத்த்தை சசிகலா கையை பிடித்து ஆறுதலாக சில வார்த்தைகளை கூறினார். அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனை வந்த சசிகலா ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்