👉 சென்னை: குழந்தை திருமணத்திற்கான காரணங்களை கண்டறிந்து உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். நகர்ப்புற வறுமையின் விளைவாக குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
************
👉சிவகாசி: சிவகாசி அருகே அரவை ஆலையில் பதுக்கி இருந்த 33 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருமங்கலத்தைச் சேர்ந்த மாதவன் பூலாவூரணி ரத்தினம் நகர் புது காலனியில் அரவை ஆலையை நடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பாலிஷ் செய்து அரிசிக் கடைகளுக்கு விநியோகித்தது அம்பலமாகியுள்ளது.
************
👉ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் தூக்குப் பாலத்தில் ரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்சார் கோளாறால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பாம்பன் ரயில் பாலம் வழியாக ரயில்கள் இயக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
************
👉திருவள்ளூர்: புளியந்தோப்பை தொடர்ந்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரியிலும் தரமற்ற முறையில் கட்டுமான பணி நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி. நிறுவனமே மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தை மேற்கொள்கிறது. 2020ல் ரூ.385 கோடி மதிப்பில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி பணிக்கு முன்னாள் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினர்.
************
👉புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 26ல் துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில் வரும் 23-ல் முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்திக்கிறார்.
************
👉மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த உப்புப்பள்ளம் பவானி ஆற்றில் துணி துவைக்க சென்ற 3 பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரில் ஒருவரை பரிசல் ஓட்டிகள் பாதுகாப்பாக மீட்டனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 2 பெண்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
************
👉தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் குடிசைமாற்றுவாரிய இடத்தை விற்பனை செய்வதாகக்கூறி பெண் ஒருவரை ஏமாற்றி ரூ. 70 லட்சம் மோசடி செய்துள்ளனர். மோசடி செய்த அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 15 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
************
👉சென்னை: சென்னை அண்ணா நகரில் திமுக நிர்வாகி கொலை வழக்கில் பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரை போலீஸ் விசாரணைக்கு ஈடுபடுத்தியுள்ளனர்.
************
👉சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.
************
👉26 மாவட்ட பதிவாளர்கள் பணியிடமாற்றம்.
➤பதிவுத்துறையில் நிர்வாக அடிப்படையில் 26 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு.
************
👉திண்டுக்கல் நாகல்நகர் அருகே லாட்டரி சீட்டு விற்ற பாண்டி (58* ) என்பவரை திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸார்
கைது செய்து அவரிடமிருந்து 118 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
************
👉இந்தியாவுல வாழ பிடிக்கலனா தாராளமா ஆப்கானிஸ்தான் போகலாம் - பீகார் பாஜக எம்.எல்.ஏ. ஹரி பூஷன் தாக்கூர் சர்ச்சை பேச்சு
*****-********
😷முகக் கவசம் உயிர்க்கவசம்😷