தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் தலைவர் திருவேங்கடம்(61) காலமானார்

 


தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் தலைவர் திருவேங்கடம்(61) காலமானார்

       

    தொலைக்காட்சி  வரலாற்றில் முக்கிய தூன் சரிந்துவிட்டது.   40 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகைகளில் பணி புரிந்த  தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் தலைவர் திருவேங்கடம்(61) (17-08-2021) அன்று மாலை இயற்கை எய்தினார்.   


சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் (18-08-2021)மாலை 3 மணி அளவில் தகனம் செய்யபடுகிறது.    காட்சி ஊடகத்தின் முதல் எடிட்டராக பணிபுரிந்த திருவேங்கடம் வின் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, சத்தியம் தொலைக்காட்சி என பல்வேறு தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த மிக மூத்த ஆசிரியர் ஆவார்.   


சன் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் செய்தி ஆசிரியராக அவர் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இன்றைய காட்சி ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் முன்னணியில் இருக்கக்கூடிய செய்தியாளர்கள் ஆசிரியர்கள் பலர் அவரிடம் பயின்றவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் அவரது இழப்பு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது பத்திரிக்கை துறையின் சாம்ராஜ்யம் வீழ்ந்து விட்டது என்றே சொல்லலாம் அவரை இழந்து வாடும் சக பத்திரிக்கையாளர் நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்திற்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


மக்கள் தூதன் மாத இதழ் என்ற பத்திரிக்கையை நிறுவனராகவும் பத்திரிக்கை ஆசிரியராகவும் பத்திரிக்கை நடத்தி வந்தார்.


தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உருவாக்கி அதன் தலைவராக இருந்து பத்திரிகை நண்பர்களை ஒன்றிணைத்து அனைவரிடத்திலும் நட்புடன், பாசத்துடன் இருந்து அரவணைத்துச் சென்றார் பல மாநாடுகளை நடத்தினார் அவரை இழந்து வாடும் சக பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியும்  செலுத்துகிறார்கள்.


உண்மை செய்திகள்.. ஆசிரியர்  P.தர்மலிங்கம்