திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சின்னராசு என்கிற முருகேசன் (52). இவரது மனைவி வளர்மதி (45), மகள் சிவரஞ்சனி (21), மகன் கார்த்திகேயன் (18). மகள் கல்லூரிப் படிப்பை முடித்து வீட்டில் இருந்தார். மகன் பழனியில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். முருகேசன் தனக்குச் சொந்தமான தோட்டத்து வீட்டில் குடியிருந்தார். நேற்று குடும்பத்தினருடன் வேலாயுதம்புதூரில் நடந்த திருமண நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பினர்.
மேலும் குடும்பத்துடன் விவசாயி முருகேஷன் விஷமருந்தி தற்கொலை செய்தது பிரேத பரிசோதனையில் அம்பலமானது*
*முருகேஷன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்தி சடலங்கள் மக்காச்சோளா தட்டையில் கிடந்தன*
*சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்