ஒரு வரிச் செய்திகள்

 


      🙏ட்விட்டரில் 1 கோடி Followers-களை பெற்ற முதல் கோலிவுட் சினிமா நட்சத்திரம் எனும் சாதனையை படைத்தார் நடிகர் தனுஷ்!


      🙏தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ. 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது; ஆனால், வடநாட்டில் இன்னும் ரூ.75,000 என்ற அளவில்தான்  இருக்கிறது” 


- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

                      ************

.    🙏ஒரு நாடும் ஒரு குடும்பமும் முன்னேற்றமடைய பெண்கள்தான் காரணம்;

படிப்பில் மட்டுமின்றி வேலைவாய்ப்பிலும் பெண்கள் அதிகம் வரவேண்டும்” 


- வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி

                       ************

    🙏கர்நாடகாவில் நாளை முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி


    🙏ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம் : 180-ஐ கடந்த உயிரிழப்புகள்

                      **********

    🙏மத்திய அரசின் நடவடிக்கையால் 2021 இறுதிக்குள் 96 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது; இது கொரோனா 3வது அலையை நிச்சயம் தடுக்கும்” 


 - ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளர்.

                   *************

    🙏தமிழ்நாட்டை தலைமையகமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதுகாக்கப்பட வேண்டும்"


- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம்.

                   ****************

    🙏மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

                       ***************

    🙏மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம்; 

                      ***************

 காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்பட  முக்கிய தலைவர்கள் பங்கேற்பு.

                   ***************

    🙏அனைத்து கட்சிக் கூட்டம் முடிந்தவுடன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அருகே சென்ற பிரதமர் மோடி,  அவரிடம் உடல் நலம் விசாரித்தார்.


                   ***************


    🙏அரக்கோணம் அருகே வழிப்பறி கொள்ளை கும்பலால் மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியின் சங்கிலியை பறிக்க முயற்சி; சங்கிலியை பறிக்க விடாததால் மூதாட்டியை அடித்துக் கொன்ற கொள்ளையர்கள்

                  ***************

    🙏மும்பையில் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் இரங்கல்

                   ***************

    🙏ரூ.163 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பொதுவெளியில் தீயிட்டு எரித்த அசாம் முதல்வர்

                      ***************    

    🙏சேலத்தில் அரசு பேருந்தில் மகளிருக்கான இலவச பயணச்சீட்டை வடமாநில ஆண்களுக்கு கொடுத்து மோசடி, இலவச டிக்கெட்டை கொடுத்து கட்டணம் வசூலித்த நடத்துனர் நவீன்குமார் சஸ்பெண்ட்