முசுட்டை கீரை அடை

 

முசுட்டை கீரை அடை

முசுட்டை இலையில் அதிகளவு இரும்பு சத்துக்கள் உள்ளது. இப்போது இந்தக் கீரையை வைத்து சத்தான முசுட்டை கீரை அடை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருட்கள் :-

பச்சரிசி - கால் கிலோ

முசுட்டை கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் - 10

பூண்டு பல் - 4

சோம்பு - அரை tsp

உப்பு - தேவைக்கேற்ப

மிளகு - 1tsp

நெய் - தேவைக்கேற்ப


செய்முறை :-

👉 அரிசியை ஊறவைத்து நீர் வடித்து மாவாக்கிக் கொள்ளவும். பின்பு அரைத்த மாவுடன் பொடிய நறுக்கிய முச்சுட்டை கீரை, பு ண்டு, சின்ன வெங்காயம், சோம்பு, உப்பு, மிளகு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

👉 கலந்த மாவை தோசை சட்டியில் நெய் தடவி, அதில் மாவை ஊற்றி தடித்த வட்டத்தில் பரப்பி விடவும். பின் அதன் மேல் சிறிது நெய் ஊற்றி பொன்னிறம் ஆனதும் இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும். இப்போது சு டான முசுட்டை கீரை அடை தயார்.


வெங்காய சட்னி சேர்த்து சாப்பிடவும் 


அன்புடன் 

கார்த்திகா