ஒரு வரிச் செய்திகள்

 


👤மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் - PSBB பள்ளி விவகாரத்தில் நடிகர் விஷால் ஆவேசம்!


👤பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையர் சுதர்சன்,  காவல் ஆய்வாளர் பாலன் உள்ளிட்ட போலீஸாரின்  சோதனையின் போது சென்னீர்குப்பம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த  240 மது பாட்டில்கள் பறிமுதல்.


👤அருப்புக்கோட்டை அருகே பத்தாம் வகுப்பு படித்துவிட்டு  கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த

போலி மருத்துவர் கைது.


👤டிஆர்டிஓவின் பவுடர் வடிவ கொரோனா சிகிச்சை மருந்து 2டிஜியின் விலை ரூ.990 ஆக நிர்ணயம்



👤கொரோனா பரவல் காரணமாக வரும் ஜூன் 30ம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு


👤கொரோனா தடுப்பூசி மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும்.* *இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் இணைய தள கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன்.



👤ஜூன் மாதத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: விலை ரூ.1195.


👤சொந்த தேவை இருந்தபோதிலும், 123 நாடுளுக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்


           நிருபர். மணிவண்ணன்