சேலத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்

 


   சேலம் உருக்காலையில் 500 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.


⭐👉 இன்று சேலத்தில் இருந்து திருப்பூர் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், செல்லும் வழியில் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்                                      

திடீரென காரை நிறுத்தச் சொல்லி யாரும் எதிர்பாராத விதமாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் சென்ற அவர், அங்கு நடைபெறும் மருத்துவ சிகிச்சை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.   பின்னர், மருத்துவ வசதிகள் குறித்தும் தடுப்பூசி போடுவது குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார். 

                                       


மேலும், விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பார்வையிட்டதோடு சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.


⭐👉 இன்று சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பொதுமக்கள் முகக்கவசம் இல்லாமல் செல்வதை கண்டதும், காரை நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி அனைவரும் முககவசம் அணியுமாறு   தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.