🙏கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் இன்று பதவி ஏற்பு.
கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சார்பில் வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
🙏வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற 500 பேர் மருத்துவ பணியை தொடங்க அனுமதி
தமிழக சுகாதாரத் துறை புதிய உத்தரவு
ஏற்கனவே இருந்த இரண்டு விதிகளையும் தளர்த்தி தமிழக அரசு நடவடிக்கை
🙏கொச்சி : காணாமல் போன நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
👊20,000 டன் துவரம்பருப்பு டெண்டர் ரத்து!
நாமக்கல் கிறிஸ்டி நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட நிலையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!
🙏தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு
👮சென்னையில் ஏடிஎம்மில் பணம் திருடிய காவலர்கள் சஸ்பெண்ட்*
சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றதாக கைதானவர்களின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் திருடிய காவலர்கள் சஸ்பெண்ட் ஏடிஎம் கார்டில் இருந்து ரூபாய் 1 லட்சம் திருடிய தனிப்படை எஸ்.ஐ.சுதாகர் தலைமை காவலர் சரவணகுமார் மீது நடவடிக்கை*
தமிழகத்தில் மே மாதத்திற்கான மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட மின்சார வாரியம் அனுமதி! மின் மீட்டரில் உள்ள அளவை புகைப்படமாக தங்கள் மின்வாரிய உதவி பொறியாளருக்கு அனுப்பி வைத்து ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்த அறிவுரை.*