காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றாள் இடைத்தேர்தல் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

 


         ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உயிரிழந்த நிலையில், அத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.


செய்தியாளர்களை சந்தித்த அவர், 'வாக்கு எண்ணிக்கை வழக்கம்போல நடைபெறும். தேர்தலில் ஒருவேளை மாதவராவ் வெற்றிபெற்றிருந்தால் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்' என தெரிவித்தார்.


 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் மாதவராவ், இவருக்கு வயது 63. இவர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததிலிருந்தே உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்


பரப்புரையில் கூட அவரது மகள்தான் பணியாற்றினார். நுரையீரல் தொற்று காரணமாக மதுரை கேகேநகர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானது. ஐசியுவில் வெண்டிலேட்டரில் இருந்து சிகிச்சை பெற்று வந்த மாதவராவ் சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.