இன்று ஒரு சமையல் குறிப்பு

 


              இன்றைய சமையல் 


           சுவையான இனிப்பு இட்லி !!


தேவையானப் பொருட்கள் :


ரவை 2 கப்


துருவிய தேங்காய் 1 கப்


அவல் 200 கிராம்


வெல்லம் (பொடித்தது) 100 கிராம்


காய்ச்சி ஆற வைத்த பால் 1 டம்ளர்


முந்திரி 20 


திராட்சை 20 


ஏலக்காய் (பொடித்தது) 10


உப்பு தேவையான அளவு


நெய் தேவையான அளவு


செய்முறை :


  முதலில் அவலை நன்றாகக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 


பிறகு அவலில் இருக்கும் தண்ணீரை வடித்து, இதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். 


  பிறகு அவல் கலவையுடன் ரவை, வெல்லம், பால், முந்திரி, திராட்சை, ஏலக்காய், உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்துக்கு கலக்கி ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 


  பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி மாவை இட்லிகளாக ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான இனிப்பு இட்லி தயார். 


                      அன்புடன் 


                       கார்த்திகா