இன்று ஒரு சமையல்குறிப்பு வெந்திய துவையல்

 



      இன்றைய சமையல் 


அஜீரணத்தைக் குணமாக்கும் வெந்தயத் துவையல்!!


வயிற்றுக்கடுப்பு மற்றும் அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் வெந்தயத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இப்போது இந்த வெந்தயத் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


தேவையானப் பொருட்கள் :


வெந்தயம் - 100 கிராம்


மிளகாய் - 10


புளி - நெல்லிக்காயளவு


வெல்லம் - சிறிதளவு


நல்லெண்ணெய் - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


தண்ணீர்- தேவையான அளவு


செய்முறை :


👉 முதலில் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சு டாக்கி வெந்தயத்தைப் போட்டு பதமாக வறுத்து எடுக்க வேண்டும். 


அதிகமாக வெந்தயத்தை வறுத்துவிட்டால் கசந்துவிடும். எனவே லேசாக வறுத்தெடுக்க வேண்டும்.




👉 பின்னர் புளியை தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு மிளகாயையும் எண்ணெயில் போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.


👉 பின் அம்மியில் வெந்தயத்துடன், ஊறவைத்த புளி, தேவையான அளவு உப்பு, மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைக்க வேண்டும்.


👉 கடைசியாக சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். 


பிறகு வெந்தயத் துவையலை சு டான சாதத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். 


அன்புடன்

கார்த்திகா