இன்றைய சமையல்
நாட்டுக்கோழி சிக்கன் சூப்
சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சிக்கன் சூப் வைத்து குடிக்கலாம்.
இன்று நாட்டுக்கோழி சிக்கன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :-
நாட்டுக்கோழி சிக்கன் (எலும்புடன்) - கால் கிலோ
வெங்காயம் - 1(நறுக்கியது)
தக்காளி - 1
இஞ்சி பு ண்டு விழுது - 1 டேபிள் ஸ்பு ன்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
மஞ்சள்தூள் - கால் டீஸ்பு ன்
உப்பு - தேவைக்கேற்ப
சீரகம் - அரை டீஸ்பு ன்
மிளகு தூள் - அரை டீஸ்பு ன்
செய்முறை :-
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குக்கரில் 3 டீஸ்பு ன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு, சீரகம், மிளகு தூள், இஞ்சி பு ண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின்பு அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பின்னர் மூடி வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
அதன் பிறகு அதனுடன் கொத்தமல்லி தழையை தூவி சிக்கன் வெந்ததும் இறக்கி
சூப்பை வடிகட்டவும்.
ருசியான நாட்டுக்கோழி சிக்கன் சூப் தயார்.
அன்புடன்
கார்த்திகா