இன்றைய சமையல்
நட்ஸ் ஆப்பம்!!
உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சத்துக்களை அள்ளி தரும் நட்ஸை அடிக்கடி சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
இப்போது இந்த நட்ஸை வைத்து எளிமையான முறையில் நட்ஸ் ஆப்பத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
பச்சரிசி - 3 கப்
புழுங்கலரிசி - 3 கப்
உளுந்து - 1 கப்
சாதம் - 3 கைப்பிடி அளவு
வெந்தயப் பொடி - 3 டீஸ்பு ன்
நெய் - தேவையான அளவு
பாலாடைக்கட்டி - 1 துண்டு
தேங்காய்த் துருவல் - 1 மூடி
பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிதளவு
நாட்டுச் சர்க்கரை - 200 கிராம்
செய்முறை :
👉 முதலில் வெந்தயத்தை முளைக் கட்டச் செய்து, காயவைத்து, பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை நெய்யில் வறுத்து, துருவிக்கொள்ள வேண்டும். பின் நெய்யில் தேங்காய்த் துருவலை நிறம் மாறாமல் வதக்கி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து இவற்றை ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின் நன்றாக ஊறியதும் வெந்தயப் பொடி, சாதம் ஆகியவற்றைச் சேர்த்து ஆப்ப மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் தேவையான அளவு உப்பு போட்டுக் கரைத்து 9 மணிநேரம் புளிக்கவைக்க வேண்டும்.
கடைசியாக அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சு டானதும், மாவை ஆப்பம் ஆக ஊற்றி சுற்றிலும் நெய் விட்டு மூடி, வேகவைத்து எடுக்க வேண்டும்.
பிறகு அதை நமக்கு விரும்பிய வடிவங்களில் நறுக்கி மேலே தேங்காய்த் துருவல், பாலாடைக்கட்டி துருவல், பாதாம், பிஸ்தா, முந்தரி துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். இதனுடன் தேங்காய்ப் பால் ஊற்றியும் சாப்பிடலாம்.
சுவையான nuts ஆப்பம் ரெடி
குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்
அன்புடன்
கார்த்திகா