திமுக தேர்தல் பரப்புரை செய்திகள்

 


தென்காசி: ரெய்டு மிரட்டல்கள் எங்களிடம் செல்லாது; எங்களை முடக்கவும் முடியாது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். ஐ.டி. ரெய்டு 10 மடங்கு கூடுதலாக எங்களை வேலை செய்ய தூண்டும் என ஆலங்குளத்தில் கனிமொழி பேசினார்.


 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



            இன்று திருநெல்வேலி மாவட்டம்,தாழையூத்து, சங்கர்நகர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 

எ.எல்.எஸ்.லட்சுமணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.அப்துல் வஹாப் ஆகியோரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார் திமுக எம்பி கனிமொழி




                 மக்களின் ஆதரவு பெற வழியற்றவர்கள் - மிரட்டல் மூலம் நம்மை வீழ்த்திவிடலாம் என மனப்பால் குடிக்கிறார்கள்.


நெருக்கடிகளை நான் எதிர்கொள்கிறேன்; வெற்றியை நீங்கள் பெற்றுத் தாருங்கள்! 


திசை திருப்பல்களால் கவனம் சிதறிவிட வேண்டாம். 


களத்தில் வெல்வோம்! தமிழகத்தை  மீட்போம் என சூளுரைத்தார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.


ஜெயங்கொண்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்த மு.க ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்


மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறும் நிலையில் ஸ்டாலின் பிரசாரம்


திமுகவினருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு ராகுல்காந்தி கண்டனம்